வெளிநாட்டில் வசிக்கும் கணவனால் மனைவியின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்ட 12 இலட்சம் ரூபா பணம் மூன்று நிமிடத்திற்குள் மற்றுமொரு வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது…
வெளிநாட்டில் உள்ள கணவன் காலி – கிந்தோட்டை பிரதேசத்தில் உள்ள தனது மனைவியின் வங்கிக் கணக்கிற்குக் கடந்த 31 ஆம் திகதி 12 இலட்சம் ரூபா பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில், மனைவியின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்ட 12 இலட்சம் ரூபா பணம் மாவனெல்லை பிரதேசத்தில் உள்ள மற்றுமொரு வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டதாகக் கணவரின் கையடக்கத் தொலைபேசிக்கு குறுஞ்செய்தி ஒன்று கிடைத்துள்ளது.
இதனையடுத்து, வெளிநாட்டில் உள்ள கணவர் இது தொடர்பில் தனது மனைவியிடம் கேட்ட போது, தான் அந்தப் பணத்தை வேறொரு வங்கிக் கணக்கிற்கு மாற்றவில்லை என கூறியுள்ளார்.
பின்னர், மனைவி இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே பொதுமக்களே வதனம் இருங்கள். ஏராளமான வாங்கி மோசடிகள் இடம்பெற்று வருகின்றன. உங்கள் பணத்துக்கு நீங்களே பொறுப்பு. தயவு செய்து உங்களுக்கு வரும் OTP இலக்கத்தை யாருக்கும் தெரியப்படுத்தாதீர்கள்.