புதிய அம்சங்களைக் கொண்ட இலங்கைக் கடவுச்சீட்டுக்கள் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் வழங்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய சாதாரண, உத்தியோகபூர்வ மற்றும் இராஜதந்திர கடவுச்சீட்டுகள் 3 வெவ்வேறு நிறங்களுடன் வழங்கப்படும் என்றும் அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் முதல் மின்னணு கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்கு தயாராகும் வகையில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு கடவுச்சீட்டுக்களை வழங்குவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக என தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஒக்டோபர் நடுப்பகுதியில் மின்னணு கடவுச்சீட்டுக்கள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் பல தொழில்நுட்ப மற்றும் சிக்கல்களை நிவர்த்தி செய்ய வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நாள்தோறும் வழங்கப்படும் கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கை 1000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது எனினும் அவசர பயணத் தேவைகளைக் கொண்டவர்களுக்கு குடிவரவுத் திணைக்களம் கடவுச்சீட்டுகளை வழங்கி வருவதாக அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.