திருகோணமலையை சேர்ந்த நபர் முல்லைத்தீவில் சடலமாக மீட்ப்பு.!

0
115

முல்லைத்தீவு செம்மலை பகுதியில் 14 ஆவது மைல் கல் பகுதியில் உயிரிழந்த நிலையில் கண்ணிவெடி அகற்றும் பிரிவில் பணியாற்றும் குடும்பஸ்தர் ஒருவர் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

திருகோணமலையினை சேர்ந்த நவரத்தினம் றாஜகாந்தன் என்பவரே இவ்வாறு உடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் 03.08.2024 இன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் திருகோணமலையினை சேர்ந்தவர் என பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளார்கள்.

இவர் மீன்பிடி தொழில் ஈடுபட்டு வருபவர் என்றும் இந்த நிலையில் இவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் தெரியவில்லை என்றும் பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளார்கள்

உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலீசாருக்கு பிரதேச வாசிகளால் தகவல் வழங்கப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலீசார் மேற்கொள்ளவுள்ளார்கள். உடலம் தற்போது முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here