கைதான வைத்தியர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியலில்..!

0
163

மன்னார் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தமை, பெண்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்தமை அரச சேவைக்கு இடையூறு விளைவித்தமை போன்ற குற்றசாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட வைத்தியர் அர்ச்சுனா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வைத்தியர் அர்ச்சுனா, மன்னார் நீதவான் நீதிபதியின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்திய நிலையில், அவரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மன்னார் வைத்தியசாலை வைத்தியர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டை தொடர்ந்து வைத்தியர் அர்ச்சுனா இன்றைய தினம் சனிக்கிழமை (3) மதியம் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

நேற்றைய தினம் (2) இரவு மன்னார் பொது வைத்தியசாலைக்குள் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தியதாக மன்னார் வைத்தியசாலை நிர்வாகம், மன்னார் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டை தொடர்ந்து இன்றைய தினம் காலை வைத்தியர் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் மன்னார் தம்பன்னை குளத்தை சேர்ந்த இளம் தாய் ஒருவர் மரணம் அடைந்த சம்பவம் தொடர்பில் தகவல் சேகரிக்க வந்த நிலையில், வைத்திய செயற்பாட்டு வைத்தியர்கள் மற்றும் சுகாதர ஊழியர்களின் சேவைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து வைத்தியர் அர்ச்சுனா இன்றைய தினம் கைது செய்யப்பட்டு மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here