எப்போ கல்யாணம் என்று தன்னை அடிக்கடி கேட்டு நச்சரித்து வந்த பக்கத்து வீட்டு முதியவரை 45 வயது நபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் உள்ள குடியிருப்பில் அசிம் இரியான்டோ [Asgim Irianto] என்ற ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வாழ்ந்து வந்தார்.
இவரது பக்கத்துக்கு வீட்டில் வசித்து வந்த 45 வயது சிரேகர் [Siregar] மீது கொண்ட அக்கறையில் அவரைப் அடிக்கடி பார்க்கும்போதெல்லாம் எப்போ திருமணம் செய்து கொள்ளபோகிறாய்?, 45 வயதாகியும் ஏன் சிங்கிளாக இருக்கிறாய்? என்று கேட்பதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சிரேகர் கடந்த ஜூலை 29 ஆம் தேதி திங்கள்கிழமையன்று முதியவரின் வீட்டுக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்துள்ளார்.
முதியவரின் மனைவியின் முன்னிலையிலேயே அவரை மரக்கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளார். சத்தம் கேட்டு அருகில் இருப்பவர்கள் வந்து சிரேகரைத் தடுத்து நிறுத்தி முதியவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.ஆனால் வழியிலேயே முதியவர் உயிரிழந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து சிரேகரை போலீசார் கைது செய்துள்ளனர். திருமணம் குறித்து அவர் தொடர்ந்து கேள்வி கேட்டு வந்ததால் தான் மனதவளவில் பாதிக்கப்பட்டு முதியவரைத் தாக்கியதாக சிரேகர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.