சமனல குளம் அணைக்கட்டுக்கு அருகில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வென்னப்புவ கொலிஞ்சாடிய பகுதியைச் சேர்ந்த உடகம மனன்னலகே கமல் பெர்சரா என்ற 29 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
கொரிய பரீட்சைக்கு தோற்றி அதில் சித்தியடைந்த நிலையில் நேற்று (4) மாலை சமணல ஏரி அணைக்கட்டுக்கு அருகில் உள்ள குளத்தில் இளைஞர்கள் குழுவொன்று ஆசிரியருடன் நீராட சென்றுள்ளனர்.
இதன்போது நீராடச் சென்ற ஒருவர் காணாமல் போன நிலையில், அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.