புதுக்குடியிருப்பில் 5 கடைகள் மற்றும் உண்டியலை உடைத்து கொள்ளையிட்ட இருவர் கைது.!

0
177

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் ஐந்து கடைகள் மற்றும் ஆலய உண்டியலை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் இருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (04.08.2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹெரத் தலைமையிலான பொலிஸார் கைது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து திருடப்பட்ட 46,230 பணமும் , திருடப்பட்ட பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 10ஆம் வட்டாரம் (வயது-14) சிறுவனும், மந்துவில்லை சேர்ந்த (வயது-24) இளைஞனும் என்று தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடைகள், ஆலய உண்டியல் உடைத்து திருடப்பட்ட சம்பவங்கள் அண்மைய நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

இதன் காரணமாக புதுக்குடியிருப்பு பொலிஸார் புதுக்குடியிருப்பு பகுதிகளில் பாதுகாப்பை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here