மன்னாரில் இளம் தாயின் மரணம் தொடர்பில் வைத்தியசாலையின் பணிப்பாளர் வெளியிட்ட தகவல்.!

0
100

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 27 ஆம் திகதி உயிரிழந்த இளம் குடும்பப் பெண் மரணம் தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணைகள் இடம் பெற்று வருவதோடு, குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை முடிவடைந்த நிலையில் உரிய தரப்பினருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 27 ஆம் திகதி பட்டதாரி இளம் குடும்ப பெண் திருமதி மரியராஜ் சிந்துஜா (வயது-27 ) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினராலும் வன்மையான கண்டனங்கள் முன் வைக்கப்பட்டது.

குறித்த பெண்ணின் மரணம் சம்பவ தினம் நோயாளர் விடுதியில் இருந்த வைத்தியர் மற்றும் பணியாளர்கள் அசட்டையீனம் காரணமாக இடம் பெற்றுள்ளதாக குறித்த பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த மரணம் தொடர்பில் நீதியான விசாரணை கள் இடம் பெற்று உரிய வைத்தியர் மற்றும் கடமையில் இருந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று (04) மாலை பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சென்று வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் வைத்தியர்களுடன் இணைந்து கலந்துரையாடலை மேற்கொண்டார்.இதன் போது பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் டானியல் வசந்தன் கலந்து கொண்டிருந்தார்.

இதன் போது மன்னார் பொது வைத்தியசாலைக்குள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அனுமதியின்றி நுழைந்து பெண்கள் மகபேற்று விடுதிக்குள் பணியாற்றிய வைத்தியருக்கு இடையூறு விளைவித்த துடன் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு இடையூரை ஏற்படுத்திய வைத்தியர் அர்ஜுனாவின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும் குறித்த பெண்ணின் மரணம் குறித்து நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் உரிய தரப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து மக்கள் மத்தியில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை மீது உள்ள அவநம்பிக்கை தகர்த் தெரியப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.

இதன் போது உயிரிழந்த இளம் குடும்பப் பெண் மரணம் தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணைகள் இடம் பெற்று வருவதோடு,குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை முடிவடைந்த நிலையில் உரிய தரப்பினருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா பாராளுமன்ற உறுப்பினரிடம் உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here