முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் 15 வயதான மாணவி ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்..
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்ப்பட்ட விசுவமடு பகுதியில் 15 வயதான மாணவி ஒருவர் நேற்றைய தினம் (04) விபரீத முடிவெடுத்து உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்குடியிருப்பு – விசுவமடு பாரதிபுரம் பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிவானந்தன் விதுஷா என்பவரே வீட்டில் விபரீத முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற போது வீட்டில் யாரும் இல்லை எனவும், வீட்டிற்கு வந்த பெற்றோர் சம்பவத்தை பார்த்ததாகவும் தந்தை குறிப்பிட்டுள்ளார். தூக்கில் தொங்கியமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என்பதுடன், புதுக்குடியிருப்புப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.