வைத்தியர் அர்ச்சுனாவுக்கு பிணை நிராகரிப்பு..!

0
120

மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுமதியின்றி நுழைந்து முரண்பாட்டில் ஈடுபட்டதுடன் மகபேற்று வைத்தியர் அறைக்குள் நுழைந்து புகைப்படம் மற்றும் காணொளி எடுத்தமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் அர்ச்சுனாவை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் திங்கட்கிழமை (05) உத்தரவிட்டுள்ளார்.

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு எதிரான வழக்கு, நகர்த்தல் பத்திரம் ஊடாக திங்கட்கிழமை (05) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு நிராகரிக்கப்பட்டு தொடர்ந்து விளக்கமறியல நீடித்து, மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதே நேரம் அனுமதி இன்றி வைத்தியசாலைக்குள் நுழைந்து வைத்தியருடன் காணொளி பதிவுகளை மேற்கொண்ட இருவரையும் விசாரணைக்கு உட்படுத்துமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மன்னார் பொது வைத்தியசாலைக்குள் கடந்த வெள்ளிக்கிழமை (02) இரவு அனுமதியின்றி நுழைந்து பெண்கள் மகபேற்று விடுதிக்குள் பணியாற்றிய வைத்தியருக்கு இடையூறு விளைவித்த துடன் வைத்தியரின் அறைக்கு சென்று அனுமதி இன்றி புகைப்படங்கள், வீடியோ எடுத்தது தொடர்பாக மன்னார் பொலிஸில் வைத்தியர் அர்ச்சுனா விற்கு எதிராக முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வைத்தியர் மன்னார் பொலிஸாரினால் சனிக்கிழமை (03) கைது செய்யப்பட்டு மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here