புதுக்குடியிருப்பு பகுதியில் 15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 18 வயது இளைஞன் கைது !

0
103

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேராவில் பகுதியில் 15 வயதுடைய சிறுமியினை தகாத முறைக்கு உட்படுத்திய 18 வயது இளைஞனை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில், புதுக்குடியிருப்பு தேராவில் கிராமத்தில் 18 வயதுடைய இளைஞன் ஒருவர் தனது வீட்டில் 15 வயதும் 10 மாதங்களும் நிரம்பிய சிறுமி ஒருவரை அழைத்துவந்து தங்கவைத்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சிறுமி மீட்கப்பட்டுள்ளதுடன் இளைஞனையும் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சிறுமி பாட்டியுடன் வாழ்ந்து வந்த நிலையில் அந்த இளைஞனுடன் ஏற்பட்ட காதல் காரணமாக இளைஞன் அழைத்து சென்று சிறுமியுடன் உறவு கொண்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்போது பாதிக்கப்பட்ட சிறுமி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் சட்டவைத்திய அதிகாரியிடம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சிறுமியுடன் உறவுகொண்ட இளைஞனை நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது எதிர்வரும் 13 ஆம் திகதி வரை இளைஞனை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here