யாழில் குழந்தையை கொ.ன்.ற தாய்க்கு விளக்கமறியல்.. நீதிமன்றம் உத்தரவு.!

0
84

யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் ஒன்றரை மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தாயை 07 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை (03) தாய்ப்பால் அருந்திய பின்னர் குழந்தை அசைவின்றி காணப்பட்டதால் அளவெட்டி வைத்தியசாலையில் குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்கிருந்து தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு குழந்தை மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது. குழந்தையின் உடலில் காயங்கள் காணப்பட்டமையால் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

உடற்கூற்று பரிசோதனையின்போது குழந்தையின் கைகள், கால்களின் எலும்புகளில் முறிவுகள், தலையில் பலமாக தாக்கப்பட்ட காயங்கள், கண்டல் காயங்கள் போன்றவை கண்டறியப்பட்ட நிலையில் குழந்தையின் மரணம் இயற்கை மரணம் அல்ல என அறிக்கையிடப்பட்டது.

அதனையடுத்து குழந்தையின் தாயாரை கைது செய்த பொலிஸார், தாயாரிடம் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

குழந்தை பால் குடிக்க மறுத்தமையால் அதன் கைகள், கால்களை திருகியதாகவும், தொடர்ந்து அழுதுகொண்டிருந்ததால் த.லையை சுவரில் மோதியதாகவும் குழந்தையின் கால்களை தான் ஏறி மி.தித்தாகவும், காதுக்குள் பிரம்பை விட்டு கு.த்தியதாகவும் விசாரணையின் போது குழந்தையின் தாய் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளின் பின்னர் குழந்தையின் தாயை பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்தியவேளை, அவரை 07 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கவும் தாயை மனநல மருத்துவரிடம் முற்படுத்தி, மருத்துவ அறிக்கையை பெற்று மன்றில் சமர்ப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here