முல்லைதீவில் மின்சாரம் தாக்கி ராணுவத்தினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
07-08-24 அன்று முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாம் ஒன்றில் கடமையாற்றும் ராணுவ சிப்பாய் ஒருவர் மின்சாரம் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் உயிரிழந்துள்ளார்.
இவரது உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
கேப்பாபிலவு பகுதியில் உள்ள ஆறாவது காலாட்படை பட்டாலியனின் கடமையாற்றும் கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 30 அகவை உடைய லான்ஸ் கோப்ரல் நிலையுடைய படையினரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
படையினரின் உயிரிழப்பு தொடர்பில் ராணுவ பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள் உடலம் முல்லைத்தீவுமாவட்டம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.