இரத்தினபுரி – எம்பிலிபிட்டிய பிரதான வீதியில் பதுல்பான பகுதியில் இன்று (07) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
சீமெந்து ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதி ஓரமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மற்றுமொரு பாரவூர்தியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது இரண்டு பாரவூர்திகளும் ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவத்தில் கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தியை செலுத்திய சாரதி உயிரிழந்தார்.
குறித்த விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.