கொழும்பு கெத்தாராம ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கட் போட்டியை பார்வையிட வந்த ஜேர்மன் பல்கலைக்கழக விரிவுரையாளரிடம் சுமார் 10 இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
50000 ரூபா, வெளிநாட்டு நாணயத்தில் 1500 யூரோக்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 7ஆம் தேதி மைதானத்தில் உள்ள கடை அருகே இருந்த ஜெர்மன் விரிவுரையாளரின் இடுப்பு பையில் இருந்த பணம் மற்றும் தொலைபேசி திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.