யாழ்ப்பாணத்தில் வீடுகள் மீது தாக்குதல் நடத்தி எரித்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 21 வயதான மூவர் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து3 மோட்டார் சைக்கிள்கள், இரண்டு வாள், நான்கு பெற்றோல் குண்டுகள் என்பனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடுகள் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல் மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் தொடர்பாகவே குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
வெளிநாட்டில் உள்ள ஒருவர் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தப்பி சென்ற மற்றொருவர் மூலம் உள்நாட்டில் உள்ள நிஷா விக்டர் என்ற நபருக்கு பணத்தை வழங்கி
குறித்த தாக்குதல்களை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.