கொழும்பு – கல்கிசை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த இரு விபச்சார விடுதிகளிலிருந்து 5 பெண்கள் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்தனர்.
கல்கிசை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிசை, வவுனியா, பமுனுவ, நொச்சியாகம மற்றும் பதுளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 21, 34, 36, 37 மற்றும் 44 வயதுடைய ஐந்து பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.