தனமலவில பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை, ஒரு வருடமாக அதே பாடசாலையில் பயிலும் 22 மாணவர்கள் தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி தனமலவில பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார்.
அதன்படி, சம்பவத்தில் ஈடுபட்ட 22 மாணவர்கள் மற்றும் அதற்கு துணையாக இருந்த அனைவரையும் கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான உண்மைகளை மறைத்தமைக்காக அந்த பாடசாலையின் அதிபர் உட்பட அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.