எரிவாயு ஏற்றிச் சென்ற லொறி மோதியதில் காட்டு யானை உயிரிழப்பு.!

0
86

திருகோணமலை, தபலகமுவ பிரதேசத்தில் வைத்து கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி எரிவாயு ஏற்றி சென்ற லொறியுடன் மோதுண்டு பெண் யானை ஒன்று உயிரிழந்துள்ளது.

இந்தச் சப்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக வனஜீவராசிகள் அலுவலக உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

கந்தளாய் – லஹபத்த காட்டுப் பகுதியில் வசித்து வந்த குறித்த யானை வீதியைக் கடக்கும்போது இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று வனஜீவராசிகள் காரியாலய பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here