திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அம்மனின் தாலி திருட்டு.!

0
129

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் பல நூறு வருட காலமாக சோழர் கால தாலி திருட்டுபோயுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போர்த்துக்கேயர் காலத்தில் கோயில் உடைக்கப்பட்ட போது சைவ சமயத்தினாரால் பல உயிர் தியாகங்கள் செய்யப்பட்டு காப்பாற்றப்பட்டு பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டிருந்த குறித்த தாலி நிலையில் கடந்த வாரம் தாலி திருட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து பொது மக்கள் குரலெழுப்ப தொடங்கியுள்ளனர். கோயில் நிர்வாகத்தினர் இவ்விடயத்தை அமைதிப்படுத்தி பொதுமக்களை சமாதானம் செய்ய முயன்றுள்ளனர்.

பல நூறு கோடி பெறுமதியான ரத்தினங்கள், வைடூரியங்கள் பொதிக்கப்பட்ட 5 பவுண் தாலி பல பூஜைகள் செய்யப்பட்டு சக்திவாய்ந்ததாக இருந்தது எனவும் இதை எவராலும் ஈடு செய்ய முடியாது எனவும் பொது மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறு அம்மன் கழுத்தில் இருந்த தாலி திருட்டு போய் சிவனின் சக்தியை செயலிழக்க செய்யப்பட்ட சதியா..? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இது குறித்து பொறுப்பு கூறவேண்டிய தரப்பினரின் இதுவரை பொலிஸ் முறைப்பாடு கூட செய்யவில்லை என தெரியவந்துள்ளது.

அதேபோல் சோழர் காலத்தில் செய்யப்பட்ட பல நூறு கோடி மதிப்புடைய 16 பவுன் வைரம், வைடூரியம் பொதிக்கப்பட்ட தங்க நகைகளும் கடந்த காலத்தில் திருட்டு போயுள்ளது. இந்நிலையில் இவ்விடயம் குறித்து மாவட்ட செயலாளர், அரசங்க அதிபர் என சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்கு பொதுமக்களால் கொண்டு செல்லப்பட்டுள்ள்ளது.

பொலிஸாருக்கும் பொதுமக்களால் முறைப்பாடு அளிக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணை தீவிரமாக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விடயம் குறித்து ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து இவ்விடயம் தொடர்பாக கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் ஆளுநர் இந்த தாலியை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், தாலி திருட்டு போயவுள்ள சம்பவம் குறித்து ஆன்மீக வாதிகளார் அச்சம் தெரிவித்தனர். இந்நிலையில் போர்த்துக்கேயரிடம் இருந்து பாதுகாக்கப்பட்ட தாலி தமிழர்களால் திருடப்படுவதற்கா.? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது தொடர்பில் திருக்கோணேஸ்வரர் ஆலய நிர்வாகத்தின் தலைவர் கூறுகையில்…

திருக்கோணேஸ்வர ஆலயத்தில் இருந்து பலகோடி ரூபா பெறுமதியான சோழர்காலத்து எந்த சொத்துக்களும் திருட்டுப் போகவில்லையெனவும் கடந்த 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆலய நிர்வாகத்தினரால் கொள்வனவு செய்யப்பட்ட 2 1/4 பவுண் தாலியும் கொடியுமே காணாமல்போனதாக தெரிவித்தார்.

இது தொடர்பில் ஆலய நிர்வாகத்தினராகிய தாம் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததாகவும் பொலிஸார் ஆலய பூகரிடம் இது தொடர்பில் முறைப்பாடொன்றை பதிவு செய்து சென்றதாகவும் ஆலய நிர்வாகத்தின் தலைவர் குறிப்பிட்டார். எனவே எது உண்மை, பொய் என பொலிஸார் விசாரணையில் தெரியவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here