இளம் வைத்தியர் ஒருவர் சடலமாக மீட்ப்பு.. பொலிஸார் விசாரணை.!

0
137

அனுராதபுரம் மாவட்டம் ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்தியரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சடலம் இன்று (12) மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்டவர் கெப்பித்திக்கொல்லாவ சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றி வரும் சாமர சதுரங்க (38-வயது) எனவும் தெரிய வந்துள்ளது.

வைத்தியரின் மனைவி தம்புத்தேகம வைத்தியசாலையில் தாதியராக கடமை ஆற்றி வருகிறார்.

ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரஹேவ பகுதியில் மனைவியின் தாயாரின் வீட்டில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த வைத்தியரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here