இலங்கையில் காலி – அம்பலாங்கொடை, படபொல பிரதேசத்தில் இளம் தம்பதி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 28 வயதுடைய பெண்ணும் 29 வயதுடைய நபரொருவருமே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த தம்பதியின் குழந்தையின் அழுகுரலைக் கேட்ட அயல் வீட்டார்கள் குறித்த வீட்டிற்குள் சென்று பார்த்த போது தம்பதியர் உயிரிழந்திருப்பதைக் கண்டுள்ளனர்.
இதனையடுத்து, அயல் வீட்டார்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் அங்கு சென்ற பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் தம்பதிகளின் உயிரிழப்புக்கான காரணம் இன்னும் வெளியாகாத நிலையில் குழந்தையை தவிக்க விட்டு இளம் தம்பதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.