பண்டாரகம – கஸ்பேவ வீதியில் வல்மில்ல கல்கடே சந்திக்கு அருகில் இ.போ.ச சொந்தமான பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பஸ் வீதியின் வலது பக்கமாக விலகி, கடை ஒன்றின் மீது மோதியதுடன் பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்த இருவர் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து இன்று (12) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் காயமடைந்த பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஏ. சாந்த ரஞ்சித் என்ற 53 வயதுடைய நபரும், பனாதர, பெரால பகுதியைச் சேர்ந்த எஸ்.கே. சுமனசிறி என்ற 60 வயதுடையவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டு பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.