மாலபே, கஹந்தோட்டை வீதி, ஜயந்தி மாவத்தையில் அமைந்துள்ளவீடொன்றினுள் விஷ வாயு தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
65 மற்றும் 45 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இரசாயனங்கள் சிலவற்றை கலக்கச் சென்ற போது இருவரும் இந்த விஷ வாயுவை சுவாசித்ததால் மூச்சு திணறல் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.