திவுலபிட்டிய – நீர்கொழும்பு வீதியில் துனகஹா சந்தி பகுதியில் இன்று (15) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
கொதிகமுவ – துனகஹா வீதியில் திவுலப்பிட்டி நோக்கி அதிவேகமாக பயணித்த முச்சக்கரவண்டியின் சாரதியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல், திவுலப்பிட்டியில் இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பலத்த காயம் அடைந்த ஒரு பெண்ணும் மற்றுமொரு ஆணும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அந்த ஆணும் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர்கள் 30, 38 மற்றும் 45 வயதுடைய கொதிகமுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். சம்பவத்தில் பலத்த காயமடைந்த குறித்த பெண் மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.