வாழைச்சேனையில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு.!

0
66

வாழைச்சேனை கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் சின்னமியான்கல் வயல் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

மாவடிவேம்பைச் சேர்ந்த (62) வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையான மா.சுப்பிரமணியம் என்பவரே உயிரிழந்துள்ளார்.

மாவடிவேம்பை பிறப்பிடமாகக் கொண்டாலும் தொழில் நிமித்தம் தமது மனைவியுடன் சின்னமியான்கல் கிராமத்தில் வசித்து வந்துள்ளார்.

நேற்று புதன்கிழமை மாலை (14) வழக்கம் போல் மேய்ச்சலுக்கு சென்ற தமது மாடுகளை கூட்டி வரும்போது இருள் சூழ்ந்து காணப்பட்டதனால் வழியில் நின்ற யானை அவரை தாக்கியுள்ளது.

இவரது அழுகுரல் சத்தம் கேட்டு வாடியில் நின்ற மனைவி கணவரை யானையின் தாக்குதலில் இருந்து காப்பற்ற ஓடியபோதும் முயற்சி பலனின்றிபோயுள்ளது.

இன்று வியாழக்கிழமை (15) உயிரிழந்தவரின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மரண விசாரணைகளை மேற்கொண்ட கோறளைப்பற்று திடீர் மரண விசாரணை அதிகாரி வடிவேல் ரமேஸ் ஆனந்தன் உயிரிழந்தவரின் சடலத்தை உடற்கூற்று சட்ட வைத்திய அதிகாரிக்கு கட்டளை பிறப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here