இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளார்.
ஹன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்புள்கம, பனாகொட வீதியின் ஜல்தர பகுதியில் நேற்று (15) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இரண்டு மோட்டார் சைக்கிள்களும் ஒன்றுடன் ஒன்று மோதியதை அடுத்து ஒரு மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த தொலைபேசி கம்பத்தில் மோதியுள்ளது.
இவ்விபத்தில் இரு மோட்டார் சைக்கிள்களிலும் பயணித்த இருவர் காயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தெடிகமுவ பகுதியைச் சேர்ந்த 18 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.