முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை வாட்டில் தூங்கிக்கொண்டிருந்த நோயாளியின் மோதிரம் மாயம்.!

0
63

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற நோயாளி ஒருவர் மருத்துவமனையில் இருந்தபோது மோதிரம் காணாமல் போயுள்ளமை தொடர்பில் பொலீசில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.

16.08.2024 அன்று முல்லைத்தீவு கள்ளப்பாடு தெற்கு பகுதியினை சேர்ந்த ஒருவர் உயர் இரத்த அழுத்தம் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் இரண்டாம் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது இரண்டரை பவுண் இரத்தினக்கல் பதித்த மோதிரம் திருடப்பட்டுள்ளதாக சந்தேக நபர் ஒருவரை இனம் காட்டி முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் 17.08.2024 அன்று முறைப்பாடு செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனை விடுதியில் தூங்கும் போது விரலில் இருந்த மோதிரம் காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதுடன் இதன் தற்போதைய பெறுமதி சுமார் ஆறு இலட்சம் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here