அமெரிக்காவின் (US) டெக்சாஸ் மாகாணத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர்.
வடக்கு டெக்சாஸில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றில் தனது மகளுடன் புறப்பட்ட அரவிந்த் மற்றும் பிரதீபா என்ற தம்பதியினர் பயணித்த காரே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த காரின் மீது மற்றொரு வாகனம் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பத்தின் போது, தமிழ் குடும்பம் பயணித்த காரில் இருந்தவர்கள் மற்றும் மற்றைய வாகன ஓட்டுநர் உட்பட மொத்தம் ஐவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை அதே குடும்பத்தை சேர்ந்த 14 வயதுடைய சிறுவன் காரில் பயணிக்காத நிலையில் விபத்தில் சிக்காமல் உயிர் தப்பியுள்ளார். இருப்பினும் சிறுவனின் எதிர்காலம் கருதி பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்ட முடிவு செய்து அதிகாரிகளால் அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இதுவரை 700,000 அமெரிக்க டொலர்கள் நன்கொடையாக திரட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.