இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், பிறந்த வீட்டுக்குப் போக வேண்டும் என்று சொன்ன மனைவியின் மூக்கை கணவன் அறுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
லக்னோவில் பூர்வா [Baniyaani Purwa] பகுதியில் வசித்து வரும் ராகுல் – அனிதா தம்பதியினரிடையே நேற்று (19) வாக்குவாதம் எழுந்துள்ளது. நேற்று ரக்க்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு தனது சகோதரனுக்கு ராக்கி கட்டிவிட பிறந்த வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று அனிதா கூறியதே இந்த சண்டைக்குக் காரணம்.
இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றிய நிலையில் கணவன் ராகுல் அனிதாவின் மூக்கை அறுத்துள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அனிதாவை ராகுலின் சகோதரன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
தீவிர சிகிச்சைக்குப் பின் ஆபத்தான கட்டத்தை கடந்த அனிதா, தனது கணவனின் கொடூரமான செயல் குறித்து பேசினார். கணவன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.