திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி பாலத்துக்கு அருகிலுள்ள ஆற்றில் ஆணொருவரின் சடலமொன்று நேற்று செவ்வாய்க்கிழமை மாலை (20) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் மஹ்ரூப் நகர் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கிண்ணியா – ஆலங்கேணி பாலத்திற்கு அருகில் ஆற்றில் மிதந்து கொண்டிருந்த நிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்த சடலத்தின் நெற்றியில் காயம் காணப்பட்டதாகவும் திடீர் மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.
உயிரிழந்தவர் ஐந்து பிள்ளைகளின் தந்தை என விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.