மட்டக்களப்பில் ஒருவர் வெ.ட்.டி.க்.கொ.லை.!

0
69

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடாவில் நேற்றிரவு 10 மணியளவில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இரு பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடைய மரியதாஸ் என்பவரே வெட்டுக்காயங்களுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் .

குறித்த நபர் நேற்றிரவு 10 மணியளவில் நாவற்குடாவிலுள்ள சாரதா வீதியால் வந்து கொண்டிருந்த போது இனந்தெரியாதவர்களால் கொலை செய்யப்பட்டதாக தெரியவருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here