புதுக்குடியிருப்பு பகுதியில் சடலமாக மீட்க்கப்பட்ட இளம் குடும்பஸ்தர்..!

0
171

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மன்னாகண்டல் பகுதியில் 18.08.2024 அன்று 28 வயது குடும்பஸ்தரான கந்தையா மோகனதாஸன் என்பவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

இவரது உயிரிழப்பு குறித்து சந்தேகம் வெளியிட்டதை தொடர்ந்து இது தொடர்பிலான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலீசார் மேற்கொண்டுவருகின்றார்கள்.

குறித்த குடும்பஸ்தர் உயிரிழப்பிற்கான காரணங்கள் சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

பிரோத பரிசேதனையின் ஹெரோயின், ஜஸ் போதைப்பொருள் உடலில் அதிகளவு காணப்பட்டுள்ளமையும் இறப்பிற்கான காரணம் என பிரோத பரிசோதனையில் சட்டவைத்திய அதிகாரியால் அறிக்கையிடப்பட்டுள்ளதுடன், குறித்த சடலம் இழுத்து செல்லப்பட்டு மாட்டுக்கொட்டிலில் போடப்பட்டுள்ளதையும் புலனாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் உயிரிழந்தவரின் நண்பர்களிடம் வாக்குமூலம் பெற்று விசாரணைகளை முடக்கியுள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு பகுதி ஒன்றில் நண்பர்களுடன் ஹெரோயின், ஜஸ் போதைப்பொருள் பாவித்துள்ளதாகவும் அதன் பின்னர் அவர் உயிரிழந்த நிலையில் நண்பர்களால் மன்னாகண்டல் பகுதியில் உள்ள இவர் காவல் காக்கும் மாட்டுத்தொழுவத்திற்கு உடலினை கொண்டு சென்று போட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

வசந்தபுரம் மன்னாகண்டலை பிறப்பிடமாகவும் 2ம் வட்டாரம் கோம்பாபில் கைவேலி புதுக்குடியிருப்பினை வசிப்பிடமாகவும் கொண்ட ஒரு பிள்ளையின் தந்தையான 28 அகவையுடைய கந்தையா மோகனதாசன் என்பவரே உயிரிழந்தவர் ஆவார், இவரது சடலம் நேற்று 20.08.2024 அடக்கம் செய்யப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here