மட்டக்களப்பில் 5 ஆம் ஆண்டு மாணவிகளுக்கு ஆ.பா.ச படங்களை காண்பித்த அதிபர் கைது.!

0
83

தரம் 5 இல் கல்வி கற்கும் மாணவிகள் மற்றும் மாணவர்களுக்கு, தன்னுடைய கையடக்க தொலைபேசியின் ஊடாக ஆபாச படங்களை காண்பித்த பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாடசாலையைச் சேர்ந்த 57 வயதுடைய பாடசாலை அதிபர் ஒருவரை புதன்கிழமை (21) இரவு கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் தரம் 5ம் ஆண்டில் 3 சிறுமிகள் 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் கல்வி கற்று வருகின்றனர். இந்த நிலையில் குறித்த மாணவர்கள் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள நிலையில் அந்த மாணவர்களுக்கு பாடசாலை முடிவுற்ற பின்னர் மேலதிகமாக மாலையில் அதிபர் கற்பித்து வந்துள்ளார்

இதன் போது குறித்த அதிபர் மாணவர்களுக்கு தனது கையடக்க தொலைபேசியில் இருந்து ஆபாச படங்களை காட்டி வந்துள்ள நிலையில் ஒரு மாணவி மாலை நேர வகுப்புக்கு போக முடியாது என பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் அதற்கான காரணத்தை கேட்ட போது சிறுமி அதிபரின் இந்த ஈனச் செயல் தொடர்பாக தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பவ தினம் பெற்றோர் 119 ம் பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அறிவித்ததையடுத்து பாதிக்கப்பட்ட 3 மாணவிகளான சிறுமிகளிடம் இருந்து வாக்கு மூலத்தை பதிவு செய்ததுடன் 57 வயதுடைய அதிபரை பொலிஸார் கைது செய்தனர்

இதில் கைது செய்யப்பட்ட அதிபரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெண்கள் சிறுவர்கள் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டுவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here