புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் ஆராச்சிக்கட்டுவ பகுதியில் இன்று (23) தனியார் பேருந்து ஒன்று முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 45 வயது குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றைய நபர் படுகாயமடைந்து ஹலாவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.