யாழில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

0
83

இன்றைய தினம் யாழ் சுன்னாகம் பகுதியில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் – சூளானை பகுதியைச் சேர்ந்த தங்கவேலு கோபிநாத் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்…

சுன்னாகம் – சூளானை பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் திருவிழா இடம்பெற்று வரும் நிலையில் குறித்த நபர் பிரசாதம் தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

ஆலயத்திற்கு அருகில் உள்ள வீடு ஒன்றின் உரிமையாளர் குடும்பத்துடன் வவுனியாவில் வசித்து வருகிறார். அவர்கள் திருவிழாவிற்காக ஊருக்கு வந்திருந்தார்கள். இவ்வாறு வவுனியாவில் இருந்து வந்த வீட்டின் உரிமையாளர் தனது வீட்டின் மோட்டார் இயங்கவில்லை என கூறி, பிரசாதம் தயாரிப்பில் ஈடுபட்ட குறித்த நபரை அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு சென்று பார்த்த குறித்த நபர் டெஸ்டர் எடுத்து வருமாறு வீட்டின் உரிமையாளரிடம் கூறியுள்ளார். அவர் டெஸ்டரை எடுத்துக்கொண்டு வந்து பார்த்தவேளை குறித்த நபர் கீழே விழுந்து உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.

அவரது சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகின்றது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here