யாழில் முச்சக்கரவண்டி தடம்புரண்டதில் 2 வயது ஆண் குழந்தை உயிரிழப்பு.!

0
106

இன்றையதினம் யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கே.கே.எஸ் வீதியால் சுன்னாகத்தில் இருந்து மருதனார்மடம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று தடம்புரண்ட நிலையில் 2 வயதுடைய ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்…

சுன்னாகத்தில் இருந்து மருதனார்மடம் நோக்கி குறித்த முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்தி தாயும், 2 வயது மகனும் பயணத்தை மேற்கொண்டனர்.

இதன்போது கிளை வீதி ஒன்றுக்கு திருப்ப முற்பட்டபோது முச்சக்கர வண்டி தடம்புரண்டது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த தாயும், மகனும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த குழந்தை உயிரிழந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here