பேருவளை பிரதேசத்தில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பேருவளை, சிறினிவாஸ் மாவத்தையில் வசிக்கும் 51 வயதுடையவர் ஆவார்.
இவர் ரயில் பாதையருகில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது பெலியத்த நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து, காயமடைந்தவர் பேருவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.