அவித்தாவ ஒலகந்த எத்தாவெட்டுனுவல பகுதியில் நீராட சென்ற பொது சுகாதார பரிசோதகர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக இத்தேபான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொரட்டுவ பிரதேசத்தின் டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் குழுவினர் மற்றும் நான்கு பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவொன்று குறித்த குளத்தில் நீராடச் சென்ற போதே இவ்வனர்த்தத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மொரட்டுவை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றிய எஸ். கௌதம் (வயது -26) மற்றும் எஸ். ஹர்ஷநாத் (வயது -28) ஆகிய இரு பொது சுகாதார உத்தியோகத்தர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பை சொந்த இடமாகக் கொண்டவர்கள் என தெரியவருகிறது.
மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை நாளை (26) நடைபெறும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.