மதுபோதையில் அரச உத்தியோகஸ்தர் ஒருவரை தாக்க முற்பட்ட குற்றச்சாட்டில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் பகுதியில் கடற்படை முகாமுடன் இணைந்து பொலிஸ் காவலரண் ஒன்றும் உள்ளது.
அங்கு நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு மது போதையில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்த அரச உத்தியோகஸ்தர் ஒருவரை வழிமறித்து, ஆவணங்களை பார்வையிட்டுள்ளனர். பின்னர் அவருடன் வாய்த்தர்க்கப்பட்டு, தாக்க முயற்சித்துள்ளார்.
அது தொடர்பில் பாதிக்கப்பட்டவரால் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, மதுபோதையில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.