திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த கார் ஒன்று சென்று கொண்டிருந்த பொழுது வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் மான்கேணி காட்டுப் பகுதியில் நேற்று (25) மாலை இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் சாரதி உட்பட காரில் பயணித்த அனைவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர்.
இதன்போது சாரதி தூங்கியமையால் கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.