யாழ் மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் ஐங்கரன் விபத்தில் பலியாகியுள்ளார்.
யாழ் நல்லூர் சங்கிலியன் பகுதியில் நேற்றிரவு 8.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் படு காயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
கலட்டி சந்தியில் இருந்து மகனை வகுப்பு முடித்து ஏற்றிவந்த போது எதிராக வந்த முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.