யாழில் கார் மோதியதில் நபர் ஒருவர் உயிரிழப்பு.!

0
122

யாழில் கார் மோதி விபத்துக்குள்ளாகிய முதியவர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (26) உயிரிழந்துள்ளார்.

இதன்போது அரசடி வீதி, இருபாலை கிழக்கு, இருபாலை பகுதியைச் சேர்ந்த 69 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் யாழ். நகரில் பாதுகாப்பு உத்தியோகத்தராக பணியாற்றி வரும் நிலையில் கடந்த 25ஆம் திகதி இரவுநேர கடமையை முடித்து விட்டு, காலை 8 மணியளவில் வீடு நோக்கி சென்றுகொண்டிருந்த போது விபத்திற்குள்ளாகியுள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here