வவுனியாவில் சுவிஸ் குடும்பஸ்தர் ப.டு.கொ.லை – சம்பவம் தொடர்பில் வெளியான புதிய தகவல்..!

0
94

வவுனியாவில் சுவிஸிலிருந்து வருகை தந்த குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இச்சம்பவம் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கனகராயன்குளம், சின்னடம்பன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஐய்யனார் கோவிலில் இடம்பெற்ற திருவிழாவின் பின்னர், அங்குள்ள வீடொன்றில் சுவிஸிலிருந்து வருகை தந்தவரும் அவரது உறவினர் ஒருவரும் தங்கி இருந்துள்ளனர்.

சம்பவ தினத்தன்று இரவு குறித்த இருவரும் மது போதையில் உறங்கியுள்ளனர். இதன்போது வீட்டுக்குள் நுழைந்த சிலர், மற்றைய நபரை வீட்டிற்குள் இருந்து இழுத்து வெளியே விட்டதுடன், சுவிஸிலிருந்து வருகை தந்த நபரைக் கொலை செய்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவத்துடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும், கொலை செய்யப்பட்டவருடன் வீட்டில் தங்கியிருந்த நபரும் சமீபத்தில் சுவிஸிலிந்து இலங்கைக்கு வருகை தந்து வவுனியா உக்கிளாங்குளத்தில் வசித்து வரும் நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை அந்த வீட்டிலிருந்த சிசிரிவி கமராவை இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here