க்ளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலையுடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரி மற்றும் மகிழுந்து சாரதிக்குத் தங்குமிடத்தை வழங்கிய குற்றச்சாட்டில் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நேற்று (28) இரண்டாவது துப்பாக்கிதாரியும் மகிழுந்தின் சாரதியும் கைது செய்யப்பட்டனர்.
பாணந்துறை – பின்வத்த பிரதேசத்தில் வைத்து பாணந்துறை காவல்துறை பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.