யாழ்ப்பாணத்தில் விஷ ஜந்து தீண்டியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கைதடி வடக்கை சேர்ந்த 45 வயதுடைய ஆணொருவர் உயிரிழந்துள்ளார். காணியொன்றினை துப்பரவு செய்து கொண்டிருந்த வேளை விஷ ஜந்து இவரை தீண்டியுள்ளது.
அதனை அடுத்து அவரை அங்கிருந்து மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.