கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புஹுல் திவ சந்திக்கு அருகில் நேற்று (28) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அநுராதபுரத்திலிருந்து கஹட்டகஸ்திகிலிய நோக்கிப் பயணித்த கயஸ் வேன் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது, முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்துள்ள நிலையில் பின்புறத்தில் அமர்ந்திருந்த இருவரும் படுகாயமடைந்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார். 28 மற்றும் 56 வயதுடைய இருவரே படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.