இப்பலோகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
522 காலாட்படை படைத் தலைமையகத்தில் பணியாற்றிய யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த 31 வயதுடைய இராணுவ வீரரே உயிரிழந்துள்ளார்.
கெக்கிராவை பகுதியிலிருந்து எப்பாவல நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியின் ஓரத்தில் இருந்த தொலைபேசி கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் பின்னர், பிரதேசவாசிகள் காயமடைந்தவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்திருந்த போதும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன்னரே அவர் உயிரிழந்துள்ளார்.