யக்கல – கம்பஹா வீதியில் யக்கல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கம்பஹாவில் இருந்து யக்கல நோக்கி பயணித்த வேன் பெண் பாதசாரி மீது நேற்று (01) மோதியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பெண் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் யக்கல பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய பெண் ஆவார்.
விபத்தை அடுத்து, வேனை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு சாரதி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை யக்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.