மினுவாங்கொடை, பொரகொடவத்தை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு தலைமுடியில் பூசப்பட்ட சாயத்தால் (டய்) தலைமுடி உதிர்ந்துக் கொண்டே சென்றுள்ளது.
இதன் காரணத்தால் குறித்த அழகு சாதன நிலையத்தின் உரிமையாளரையும் உதவியாளர் இருவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு பொலிஸாருக்கு மினுவாங்கொடை நீதவான் டி. தேனபந்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அழகு நிலையத்தில் பயன்படுத்தப்படும் அழகுசாதனப் பொருட்களின் வகைகளை சரிபார்த்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவும் நுகர்வோர் ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டது.
இதுதொடர்பான சம்பவத்தின் பின்னர் சலூனின் உரிமையாளரும் அவரது உதவியாளர்களும் சலூனை மூடிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்களது வீடுகளை சோதனையிட்ட போது அவர்கள் வீடுகளை விட்டும் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்